சாதாரண குடும்பத்தில் பிறந்து மருத்துவம் தேவையா.? விஜய்யின் பேச்சை சர்ச்சையாக்கிய பிரபலம்

7 months ago 8
ARTICLE AD BOX

Vijay : விஜய் கடந்த இரண்டு வருடங்களாகவே அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று அந்த விழாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய விஜய் நீட் தேர்வை பற்றியும் பேசி இருக்கிறார்.

அதாவது நீட் தேர்வில் தோல்வியடைந்த பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதற்காக விஜய் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது படிப்பிலும் சாதிக்க வேண்டும், படிப்பும் சாதனை தான். அதற்காக ஒரே ஒரு படிப்பை மட்டும் வைத்து நாம் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது.

மேலும் அதனால் மன அழுத்தமும் கொள்ளாதீர்கள். நீட்டைக் கடந்த இந்த உலகம் மிகவும் பெருசு. இதில் நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் மக்களிடத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார்.

விஜய்யின் பேச்சை சர்ச்சையாக்கிய பிரபலம்

blue-sattai-maranblue-sattai-maran

விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது என்று பாஜக சொன்னது. ஆடு, மாடு மேய்ப்பதை அரசு தொழில் ஆக்குவேன் என்று சீமான் சொன்னார். இப்போது விஜய் சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்று கூறி இருக்கிறார்.

ப்ளூ சட்டையின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வருகிறார்கள். சில கட்சிகள் இதற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

இப்போது விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில் ஆதரவு அளிப்பது போல் பேசி இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது விஜய்யின் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை தர வாய்ப்பு இருப்பதாக பிரபலங்கள் குறி வருகிறார்கள்.

Read Entire Article