சாருகேசி: "இதைப் படமாகப் பண்ணச் சொன்னதே ரஜினி காந்த் சார்தான்" - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

6 months ago 7
ARTICLE AD BOX

'பாட்ஷா', 'அண்ணாமலை', 'ஆளவந்தான்' உள்ளிட்ட பல முக்கியமான படங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

இப்போது அவர் இயக்கியிருக்கும் 'சாருகேசி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

Director Suresh KrishnaDirector Suresh Krishna

இந்த நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், "'சாருகேசி' ஒரு மியூசிகல் பெயர். இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவருக்கு நன்றி சொல்றதுக்கு ஒரு காரணமும் இருக்கு.

இந்தப் படத்தின் கதையை முதல்ல நாடக வடிவத்துல பார்த்து, அவர்தான் அந்தக் கதையைப் படமாகப் பண்ணச் சொன்னார்.

ரஜினி சார் அப்படிச் சொன்னது எனக்குத் தெரியாது. ஆனா, நான் அந்த நாடகத்தைப் பார்த்துட்டு, 'இது சினிமாவுக்கு அற்புதமான கதையாச்சே'ன்னு சொன்னேன். ஒய்.ஜி. மகேந்திரன் சார் உடனடியாக ஒரு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி, 'நீங்க டைரக்ட் பண்ணுங்க சார். நான் நடிக்கிறேன்'னு சொன்னார். நம்ம ரீமேக் படங்கள் பண்ணுறது சுலபம்.

ஒரு நாவலைத் திரைப்படமாகவும் நான் எடுத்திருக்கேன். ஒரு நாடகக் கதையை (Theatre Play) சினிமாவாக மாத்துறது ரொம்பக் கஷ்டம். அந்த நாடகத்தை வீடியோவாக எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்.

அதைப் பார்த்துட்டு, இரண்டாவது நாளில் நான் திரைக்கதை எழுதத் தொடங்கிட்டேன். ஒய்.ஜி. மகேந்திரன் சாருக்கும் திரைக்கதை ரொம்ப பிடிச்சிருந்தது. நான் 'சங்கமம்' படம் பண்ணியிருக்கேன்.

ஆனா, முழுமையான கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி படம் பண்ணினது இல்லை. தேவா சார் இது மாதிரியான கர்நாடக இசையை அமைக்கிறதுக்கு விருப்பமாக இருக்கார்னு ஒய்.ஜி.எம் சொன்னாரு.

எனக்கும் தேவா சாருக்குமான காம்போ பத்தி அவருக்குத் தெரியும்னு சொல்லியிருந்தார். அவர் விருப்பம் தெரிவிச்சிருந்தா, அவர் கண்டிப்பாக இசையமைக்கட்டும்னு சொன்னேன்.

கர்நாடக பாடல்களை யார் பாடினா நல்லா இருக்கும்னு பேசும்போது, தேவா சார் ஷங்கர் மகாதேவனோட பெயரைச் சொன்னாரு.

அவருக்கான பணத்தை என்னால கொடுக்க முடியாது, இருந்தாலும், என்னுடைய 'ஆளவந்தான்' படத்துக்கு அவர்தான் மியூசிக் பண்ணியிருக்கார்.

Director Suresh KrishnaDirector Suresh Krishna
"இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டம்" - ஜன நாயகன் குறித்து தயாரிப்பாளர்

நான் கேட்டுப் பார்க்கிறேன்னு சொன்னேன். பாடல் பற்றிய விவரத்தைச் சொல்லிட்டு, உங்களுக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்.

'அவர் பாட்டு அனுப்புங்க'ன்னு சொன்னாரு. டியூனைக் கேட்டுட்டு, 'இந்தப் பாடலை நான் பாடாமல் மிஸ் பண்ணினால், அது நான் பண்ணுற தவறாக இருக்கும்'னு சொன்னாரு.

பாடல்கள் ரெக்கார்ட் பண்ணினதுக்கு அப்புறம், நான் சம்பளத் தொகை எவ்வளவுன்னு கேட்டேன். அதுக்கு அவர், 'பணம் சம்பாதிக்கிறது வேற. ஆனா, இப்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம். இந்த வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு எப்பவும் நன்றி தெரிவிப்பேன்'னு சொன்னார்" எனப் பேசினார்.

Rajinikanth: "என் பாசிடிவிட்டிக்கான சீக்ரெட் இதுதான்..." - ஆன்மிக அனுபவம் பகிர்ந்த ரஜினிகாந்த்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article