ARTICLE AD BOX
Mari Selvaraj: குறிப்பிட்ட சமூகத்தினருக்கான படங்களை எடுத்து சினிமாவை வேற்றுப்பாதைக்கு கொண்டு போகிறார்கள் என்று விமர்சனம் இயக்குனர்கள் ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் மீது உண்டு.
இருந்த போதிலும் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற எல்லா படங்களுமே தமிழக மக்களுக்கு நெருக்கமான ஒரு கதைக்களம்.
இருந்த போதிலும் சமீபத்தில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கிறது அல்லது உண்டு பண்ணுகிறார்கள் என்று கூட சொல்லலாம்.
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆணவ கொலை என்ற பெயரில் கவின் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காதலியின் தம்பியே இந்த இளைஞனை கொலை செய்திருக்கிறார். இறந்த கவின் பட்டியல் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜின் X தள பதிவு!
இது குறித்து மாரி செல்வராஜ், நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் …சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும். என்று பதிவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்திருந்தார்.
Mari Selvarajஇது குறித்து இணையதளவாசி ஒருவர் போன மாதம் அஜித் என்ற இளைஞனை படுகொலை செய்திருந்தார்கள் காவலர்கள். இதுகுறித்து நீங்கள் ஏன் பேசவில்லை, சாவில் கூட ஜாதி பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதை பலரும் ஆமோதித்து இருக்கிறார்கள். கேள்வி கேட்டாலும் குற்றம், கேட்காமல் விட்டாலும் குற்றம் என்பது போல் தான் இருக்கிறது இது போன்ற சம்பவங்கள்.

5 months ago
6





English (US) ·