ARTICLE AD BOX

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் பாரதியார் தெருவைச் சேர்ந்த ஜெய கோபால் என்பவரது மனைவி யமுனா பாய் (63). இவருக்கு சதிஷ், ரத்தீஷ் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு யமுனா பாய், வீட்டை பூட்டி விட்டு மகன் சதிஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த மறைமலை நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், யமுனா பாய் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பேருந்தில் தப்பிச் செல்வதை கண்டறிந்துள்ளனர்.

3 months ago
4







English (US) ·