ARTICLE AD BOX

புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 11- 5, 6- 11, 4- 11, 7- 11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான ராதிகா சுதந்திர சீலன், தாய்லாந்தின் அனந்தன பிரசேர்த்ரதனகுல்லுடன் மோதினார். இதில் ராதிகா 11- 7, 11- 3, 11- 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

1 month ago
2







English (US) ·