சிம்புவுக்காக வெற்றிமாறன் கையில் எடுத்த கதை.. அப்படின்னா தனுஷ்.?

6 months ago 7
ARTICLE AD BOX

Simbu: இப்போது சோஷியல் மீடியாவின் சூடான செய்தி என்றால் சிம்பு, வெற்றிமாறன் இணையும் படம் பற்றி தான். கடந்த சில நாட்களாகவே இந்த செய்தி ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்றார் போல் நேற்று ப்ரோமோ சூட் நடக்கும் இடத்திலிருந்து போட்டோக்கள் லீக் ஆனது. அதில் நெல்சன் வேறு இருந்தது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இதிலிருந்து வெற்றிமாறன் சிம்புவுக்காக ஸ்பெஷலாக ஏதோ செய்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் வட சென்னை 2 கதையாகத்தான் இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகிறது.

அப்படின்னா தனுஷ்.?

ஆனால் இப்போது ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் தனுஷை வைத்து வடசென்னை 2 எடுப்பதில் உறுதியாக இருக்கிறார். அதே சமயம் அதில் வரும் ராஜன் கதாபாத்திரத்தை தனியாக ஒரு வெப் தொடராக எடுக்கும் ஐடியாவும் இருக்கிறது.

ஆனால் அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து அவர் எடுக்க இருப்பதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. உடனே சிம்பு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன.

ராஜன் வகையறா என டைட்டில் வைத்து ஒரு போஸ்டரை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது. அதே போல் இந்த கதையில் தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் எதுவும் உறுதியாக தெரியாது. இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க தான் வேண்டும்.

Read Entire Article