“சிரிப்பாக இருக்கிறது...” - இங்கிலாந்து வீரர்களை ‘சம்பவம்’ செய்த அஸ்வின்!

5 months ago 6
ARTICLE AD BOX

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் எடுக்கும் தீர்மானத்தை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் கிராலி, பென் டக்கெட் போன்றோர் கிண்டல் தொனிக்க வசைபாடியதை ரவிச்சந்திரன் அஸ்வின் தன் யூடியூப் சேனலில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.

ஜடேஜா ஆட்டத்தை முடிக்க மறுத்ததை அடுத்து, அவரிடமும் சுந்தரிடமும் இங்கிலாந்து வீரர்கள் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். ‘என்ன ஒரு மணி நேரத்தில் சதம் எடுத்து விடுவீர்களா?’, ‘ஹாரி புரூக் பந்து வீச்சில் சதம் எடுக்க வேண்டுமா?’ என பென் டக்கெட் கேட்க, ‘அட! கைகொடுப்பா ஜடேஜா’, ‘சதம் எடுக்க வேண்டுமெனில், இன்னும் வேகமாக அடித்து ஆடியிருக்க வேண்டும்’ என ஜாக் கிராலி சொல்லியிருக்கிறார்.

Read Entire Article