சிவகங்கையில் திமுக நிர்வாகி கொலை: 3 இளைஞர்கள் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சிவகங்கை: முன்விரோதம் காரணமாக திமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை அருகேயுள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ( 27). திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.

ஒப்பந்ததாரரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் பிரவீன்குமார் தனது தோட்டத்துக்கு சென்றார். தோட்டத்தில் இருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

Read Entire Article