சீனியர் மகளிர் கால்பந்து போட்டி: இறுதி சுற்று அக்.1-ல் தொடக்கம்

3 months ago 5
ARTICLE AD BOX

சத்தீஸ்கர்: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஷ்கர் மாநிலம் நரேன்பூரில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் மணிப்பூர், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, அசாம் அணிகள் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்கத்துடனும், 9-ம் தேதி ஒடிசாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது தமிழ்நாடு அணி. போட்டிகள் அனைத்தும் ஆர்.கே.எம் ஆஷ்ரம மைதானத்தில் நடைபெறுகின்றன.

Read Entire Article