ARTICLE AD BOX
குஷ்புஅந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள்சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதினை அரண்மனை 4 திரைப்படம் பெற்றது. இந்த விருதினை அரண்மனை 4 திரைப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு பெற்றுக் கொண்டார். இந்த விருதினை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் வழங்கினார்.
விருதினைப் பெற்ற நடிகை குஷ்பு பேசுகையில், “இந்த விருதினை கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி. எப்படி ஒரு பள்ளியின் ஆசிரியர் நம்மை எவ்வளவு திட்டி பேசினாலும் நமக்கு கடைசியில் ஒரு சாக்லெட் கொடுத்துவிட்டு போவாங்க. அது மாதிரி விகடன் விருது. சுந்தர்.C தமிழ் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. அந்த வகையில் சுந்தர் சி முதல் முறையாக விகடன் விருது பெறுகிறார். விகடனில் மார்க் வாங்குவது பெரிய விஷயம். சென்ற வருடங்களில் நிறைய மார்க்குகளை படங்களுக்கு வழங்கினார்கள்.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில்...விகடனில் ஹார்ட் பெல்ட் படங்களுக்கு மட்டும்தான் விருது கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கமர்சியல் சினிமாவிற்கும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்ற வகையில் விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் விகடன் குழுமத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இந்த விருதுநை வாங்க சுந்தர் சி தான் வந்து இருக்க வேண்டும். அவர் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 திரைப்படத்தின் வேலைகளில் இருக்கிறார். நான் வந்தால் என்ன அவர் வந்தால் என்ன இரண்டு பேரும் ஒன்று தான்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·