சுழலுக்கு கட்டுப்பட்ட நியூஸி. - இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு | சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்

9 months ago 8
ARTICLE AD BOX

துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 252 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 15-வது முறை இந்தியா டாஸை இழந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரோஹித் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார். இருப்பினும் ‘எதற்கும் தயார்’ என டாஸின் போது அவர் சொல்லி இருந்தார். இந்த தொடர் அந்த அனுபவத்தை தங்களுக்கு தந்துள்ளதாக கூறினார்.

Read Entire Article