சூரிய அஸ்தமனத்தில் ஜனநாயகனின் எழுச்சி.. விஜய் பிறந்தநாளுக்கு தயாராகும் ஸ்பெஷல் கிப்ட்

6 months ago 7
ARTICLE AD BOX

Jana Nayagan: விஜய்யின் அரசியல் நகர்வுகள் எப்போதுமே சோசியல் மீடியாவில் வைரல் தான். அதேபோல் அவருடைய கடைசி படத்தை அவருடைய ரசிகர்கள் மட்டும் இன்றி அரசியல் பிரபலங்கள் கூட எதிர்பார்த்து வருகின்றனர்.

கட்சி தொடங்கிய பிறகு வரும் படம் என்பதாலும் ஆளும் கட்சியை அவர் நேரடியாக எதிர்ப்பதாலும் தான் இத்தனை பரபரப்பு. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் அரசியல் சார்ந்த கதை என்பதை அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள் சொல்லாமல் சொன்னது.

அதை அடுத்து விஜய் பிறந்தநாளில் தரமான ஒரு கிப்ட்டை இறக்க இருக்கிறது தயாரிப்பு தரப்பு. சரியாக 22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளுக்கு தயாராகும் ஸ்பெஷல் கிப்ட்

அதிலும் இந்த அப்டேட்டுடன் வெளியான போஸ்டர் தான் தரமான சம்பவம். அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் விஜய் கை ஓங்குகிறது. இது ஜனநாயகனின் எழுச்சி என்பது போல் அந்த போஸ்டர் இருக்கிறது.

மேலும் விஜய் முகத்தை பார்த்தபடியே மக்கள் எதையோ எதிர்பார்த்து காத்திருப்பது போல் இருக்கிறது. இந்த போஸ்டர் மூலம் அடுத்த வருட தேர்தலில் நம் கை ஓங்கும் என்பதை சொல்லி இருக்கின்றனர்.

இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் ரசிகர்களின் பதிவுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

போஸ்டருக்கே இப்படி என்றால் பாடல் வந்தால் என்ன நடக்குமோ. ஆக மொத்தம் விஜயின் பிறந்தநாளில் முரட்டு சம்பவம் ஒன்று நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read Entire Article