ARTICLE AD BOX
இயக்குனர் ஹரி - நடிகர் சூர்யா இணைவில் உருவான சிங்கம் திரைப்பட வரிசைகளின் 2-ஆம் பாகம் 2013-ஆம் ஆண்டு வெளியானது. 50 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 123 கோடி வசூல் செய்தது!
இயக்குனர் ஹரி - நடிகர் சூர்யா இணைவில் உருவான சிங்கம் திரைப்பட வரிசைகளின் 3-ஆம் பாகம் 2017-ஆம் ஆண்டு வெளியானது. 85 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 113 கோடி வசூல் செய்தது!
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவு திரைப்படம் ஏழாம் அறிவு. 70 கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 109 கோடி வசூல் செய்தது.
300 கோடி ரூபாய் பொருட்செலவில் இயக்குனர் சிவா இயக்க, 3டி அம்சத்துடன் வெளியான தமிழ் திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் ~106 கோடி ரூபாய் வசூல் செய்து இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்தது.
நடிகர் சூர்யா 3 வேடங்களில் நடிக்க கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவு திரைப்படம் 24. 75 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் 108 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் நடிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இத்திரைப்படம் 97 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஹரி - நடிகர் சூர்யா இணைவில் உருவான சிங்கம் திரைப்பட வரிசைகளின் முதல் பாகம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. 30 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 93 கோடி வசூல் செய்தது!
இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஆர்யா நடிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காப்பான். 70 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் 87 கோடி வசூல் செய்தது!
Thanks For Reading!








English (US) ·