ARTICLE AD BOX

சென்னை: மருத்துவம் மற்றும் மின்சாரத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே.நகர், 45-வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன் (38). தனியார் நிறுவனம் ஒன்றில் மருந்தாளுநராகப் பணி செய்து வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் (38) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. தமிழ்நாடு மருத்துவத் துறை மற்றும் மின்சாரத் துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை எங்களுக்கு நன்கு தெரியும். மருத்துவத் துறை வேலைக்கு ரூ.7 லட்சம், மின்சாரத் துறை வேலைக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் அந்த வேலைகளில் சேர்த்து விடுவதாக இவர்கள் மதியழகனிடம் கூறியுள்ளனர்.

3 months ago
5







English (US) ·