சென்னை கொட்டிவாக்கத்தில் வேலை செய்த வீட்டில் 60 பவுன் நகை, பணம் திருடிய நேபாள தம்பதி கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: கொட்டிவாக்கத்தில் வேலை செய்த வீட்டிலேயே நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிய நேபாள தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொட்டிவாக்கம், லட்சுமண பெருமாள் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (60). ஐ.டி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில், மகேஷ் குமார் வீட்டு பாதுகாப்பு மற்றும் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ள நேபாள நாட்டைச் சேர்ந்த ரமேஷ் மானசாகி (22) மற்றும் அவரது மனைவி பினிதா சாகி (21) ஆகிய இருவரை ஒரு வருடத்துக்கு முன்னர் பணிக்கு அமர்த்தி இருந்தார்.

Read Entire Article