ARTICLE AD BOX

சென்னை: கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானதைக் கண்டு, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளை மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் (K-11 CMBT) கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பேருந்தில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்ததில் திருடப்பட்ட பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர்.

3 months ago
5







English (US) ·