சென்னை | சிகரெட் வாங்கி தர மறுத்து திட்​டிய​தால் பெயின்டர் கொலை: இளைஞர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: மேற்கு மாம்​பலம், தம்​பையா சாலை சந்​திப்பு பகு​தி​யில் வசித்​தவர் சங்​கர் (44). பெயின்​டிங் மற்​றும் எலெக்​ரீஷியன் வேலை செய்து வந்​தார். கடந்த 1-ம் தேதி இரவு தலை​யில் பலத்த காயத்​துடன் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்பட்ட சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று அதி​காலை உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​கு பதிந்​து விசாரித்தனர். சங்​கரின் வீட்​டின் அருகே பொருத்​தப்​பட்​டுள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​து​ அதனடிப்படையில் அதே பகு​தி​யைச் சேர்ந்த தருண் (23) என்​பவரை கைது செய்தனர். சம்​பவத்​தன்று சங்​கர் அவரது வீட்​டினருகே நின்​றிருந்​தார். அப்​போது, அங்கு மது​போதை​யில் வந்த தருண், சிகரெட் வாங்கி வரச் சொல்​லி​யுள்​ளார்.

Read Entire Article