ARTICLE AD BOX

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 13 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர். இது குறித்து, ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தில் 4-வது மற்றும் 5 வது நடைமேடை இடையே ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. இதை கண்ட ரயில்வே போலீஸார் அங்கு சென்று அந்த பையை எடுத்து திறந்து பார்த்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

8 months ago
8







English (US) ·