சென்னை | தங்கம் என நினைத்து பித்தளை திரிசூலத்தை திருடியவர் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: கொடுங்​கையூர், கிருஷ்ண​மூர்த்தி நகர், வள்​ளுவர் தெரு​வில் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் உள்​ளது. இந்த கோயி​லில் உள்ள அம்​மன் கரு வறை​யில் இருந்த பொருட்​கள் கடந்த 3-ம் தேதி சிதறிக் கிடந்​தன. அம்​மன் சிலை கையி​லிருந்த பித்​தளை திரிசூலம் திருடு​போ​யிருந்​தது தெரிய​வந்​தது.

அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்​வாகி​கள் இதுகுறித்து கொடுங்​கையூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர். அதன்​படி அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அந்த பகு​தி​களில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

Read Entire Article