சென்னை | தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டங்களை பதுக்கி விற்ற தனியார் நிறுவன மேலாளர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை பதுக்கி விற்பனை செய்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 187 காற்றாடிகள், 72 மாஞ்சா நூல்கண்டுகள் மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்க விடப்பட்டதால் சென்னையில் முன்பு உயிரிழப்பு மற்றும் உடல் உறுப்பு துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாஞ்சா நூல் பயன்படுத்தி விடப்படும் பட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மாஞ்சா நூல் பட்டம் விடுவது, அதை விற்பனை செய்வது, பதுக்குவது குற்றம் என அறிவிக்கப்பட்டது. மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர் கண்காணிப்பிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Entire Article