ARTICLE AD BOX

சென்னை: திருமண தரகர் என்று கூறி, வீட்டுக்கு வந்து நகை, செல்போனை திருடிக்கொண்டு தப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகனா (54). இவரது கணவர் காலமாகிவிட்டார். 2 மகன்களும் மலேசியாவில் வேலை செய்கின்றனர்.
இதனால், மோகனா தனியாக வசிக்கிறார். மூத்த மகனுக்கு திருமண வயது ஆகிவிட்டதால், பெண் தேடி வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி காலை, பெண் ஒருவர் மோகனாவை செல்போனில் தொடர்பு கொண்டார். தனது பெயர் லட்சுமி என்றும், திருமண தரகர் என்றும் அறிமுகம் செய்து கொண்ட அவர், வரன் பார்ப்பது தொடர்பாக நேரில் பேச வேண்டும் என்று கூறி முகவரியை வாங்கிக் கொண்டார்.

7 months ago
8







English (US) ·