சென்னை | நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017 ஜன.27-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் மதார்ஷா தெருவில் சிலருடன் பேசிக்கொண்டிருந்த பெயின்டிங் தொழிலாளி ஜாகிர் உசேன் (25) படுகொலை செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களான ஸ்ரீகாந்த்(24), ரத்தினராஜ்(22), முரளி(24), ரஞ்சித்(19) ஆகியோர் குடிபோதையில் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

Read Entire Article