சென்னை | போதைப் பொருள் பதுக்கிய பெண் உள்ளிட்ட 2 பேர் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

சென்னை: மெத்​தம் பெட்​டமைன் போதைப் பொருள் பதுக்​கிய​தாக பெண் உள்​ளிட்ட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர். போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த தனிப்​படை போலீ​ஸார் ரோந்து மற்​றும் கண்​காணிப்பை முடுக்​கி​விட்​டுள்​ளனர். அதன் ஒரு பகு​தி​யாக புளியந்​தோப்பு போலீ​ஸார் நேற்று முன்​தினம் மதி​யம் பழைய ஆடு​தொட்டி அருகே கண்​காணித்​தனர்.

அப்​போது, அங்கு சந்​தேகத்​துக்​கிட​மாக நின்​றிருந்த பெண் உட்பட 2 பேரை விசா​ரித்​த​போது, அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளித்​தனர். இதையடுத்​து, அவர்​களின் உடமை​களைச் சோதித்​த ​போது, மெத்​தம் பெட்​டமைன் போதைப்​பொருள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. அதை பறி​முதல் செய்த போலீ​ஸார், போதைப் பொருள் வைத்​திருந்த புளியந்​தோப்​பு, போகிப்​பாளை​யத்​தைச் சேர்ந்த பெரோஸ்​கான் (30), புரசை​வாக்​கத்​தைச் சேர்ந்த ஜெயந்தி (34) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

Read Entire Article