ARTICLE AD BOX

சென்னை: திருவான்மியூர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல்(18). மாட்டாங்குப்பத்தில் உள்ள ஒரு மீன் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி இரவு வேலை முடித்து மெரினா கடற்கரையில் படுத்து தூங்கினார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு விசாரித்தார் பின்னர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி சாமுவேலிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பினார்.

9 months ago
8







English (US) ·