சென்னை | வரதட்சணையாக 50 பவுன் நகை கேட்டு திருமணத்தை நிறுத்திய ஐடி ஊழியர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: சென்​னை, முகப்​பேரைச் சேர்ந்த 28 வயது பெண் ஒரு​வருக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூலம் ஐடி ஊழிய​ரான மேற்கு முகப்​பேரை சேர்ந்த ஆதித்​யன் (31) என்​பவருடன் அறி​முகம் ஏற்​பட்​டது. இதையடுத்து இரு​வரும் காதலித்து வந்துள்ளனர். ஒன்​றரை வருடங்​களாகப் பழகிய நிலை​யில் இரு​வீட்​டாரும் நிச்​ச​யம் செய்​து, வரும் டிச.1-ம் தேதி திரு​மணம் செய்​து​வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த மாதம் ஆதித்​யன் மற்​றும் அவரது பெற்​றோர் திரு​மணத்​துக்கு 50 பவுன் தங்க நகைகளை வரதட்​சணை​யாக கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அவ்​வளவு நகை போடும் அளவுக்கு வசதி இல்லை எனப் பெண்வீட்​டார் தெரி​வித்​ததையடுத்து மாப்​பிள்ளை வீட்​டார் திரு​மணத்தை நிறுத்​திவிட்டதாக கூறப்படுகிறது.

Read Entire Article