சென்னையில் டாஸ்மாக் கடைகளில் தொடரும் செல்போன் திருட்டு - 4 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மது பிரியர்களை குறிவைத்து தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகலிவாக்கம், கிருஷ்ணவேணி நகரைச் சேர்ந்தவர் ஐ.டி ஊழியர் ஜீவா (48). இவர் கடந்த 1-ம் தேதி மாலை, அண்ணாசாலை, ஜி.பி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிசலில் மது வாங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ஐ-போன் திருடு போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜீவா, இது தொடர்பாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

Read Entire Article