ARTICLE AD BOX

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷேய்க் ரஷீத் 27, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 43 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் தோனி 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார்.
இந்நிலையில் லக்னோவில் விளையாடியது போன்று பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் ஷாட்களை மேற்கொள்ளும் வகையிலான ஆடுகளத்தை சேப்பாக்கம் மைதான ஆடுகள வடிவமைப்பாளர்கள் அமைக்க வேண்டும் என தோனி வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் நடப்பு சீசனில் மந்தமாக உள்ள சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ போட்டிக்கு பின்னர் தோனி கூறியதாவது:

8 months ago
8







English (US) ·