ARTICLE AD BOX

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆட்டங்களை நடத்துவதற்கான நகரங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், மும்பை வான்கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

1 month ago
3







English (US) ·