ARTICLE AD BOX

சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று காலை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தார். அப்போது, ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்தார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் வயிற்றில் குத்தினார்.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரைப் பிடிக்க முயன்றனர். உடனே அந்த இளைஞர், தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த சேலம் டவுன் போலீஸார், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

8 months ago
8







English (US) ·