ARTICLE AD BOX

ஈரோடு: சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பவானி அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சம்பவத்தின்போது காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஒருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் ஈரோடு நசியனூர் என்ற இடத்தில் இன்று (மார்ச் 19) காலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை சித்தோடு காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயன் என்பவர் நசியனூர் அருகே வெட்டுக் காயங்களுடன் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.

9 months ago
9







English (US) ·