ARTICLE AD BOX

சென்னை: சைபர் குற்ற கும்பல்களிடமிருந்து கடந்த ஒரு மாதத்தில் ரூ.1.62 கோடியை மீட்ட சென்னை போலீஸார், அதை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் கைது, ஆன்லைன் பகுதி நேர வேலை, கிரிப்டோ கரன்சி, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்த வகை மோசடி மூலம் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணமும் சுருட்டப்படுகிறது.
சைபர் மோசடியைத் தடுக்கவும், பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் சென்னை காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சைபர் க்ரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக சென்னையில் உள்ள 4 மண்டலங்களிலும் சைபர் க்ரைம் பிரிவு பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.

3 months ago
5







English (US) ·