ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 month ago 2
ARTICLE AD BOX

எச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் இடம்பெற்றுள்ளனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

Mamitha Baiju About VijayMamitha Baiju About Vijay

இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.

வீடியோ ஒன்றுடன் சோஷியல் மீடியா தளங்களில் மாலை 5.30 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், மலேசியாவில் டிசம்பர் 27 அன்று 'ஜன நாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் விஜய்யின் கரியரில் கடைசி படம் என்பதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Read Entire Article