ஜின்: திரை விமர்சனம்

6 months ago 8
ARTICLE AD BOX

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் பேண்ட் பாடகராக இருக்கும் சக்தி (முகேன் ராவ்), இந்தியா வரும்போது, பழமையான பெட்டியை வாங்கிக்கொண்டு திரும்புகிறார். வீட்டில் உள்ள பலரும் அது என்ன பெட்டி எனக் கேட்க, அதற்குள் ‘ஜின்’ என்கிற அதிர்ஷ்டப் பேய் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

முதலில் மிரண்டாலும் பின்னர், பிரியா (பவ்யா) என்கிற பெண்ணை, சக்தி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததால் ஜின்னை ஏற்கிறார்கள். ஆனால், பிரியாவை ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுப் போக, அதன் பின் ஜின் மீது சந்தேகம் வந்து அது இருக்கும் பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிறார் சக்தி. பெட்டிக்குள் இருந்த ஜின் வெளியே வந்ததா, பிரியாவை கொலை செய்ய முயன்றவர்கள் யார் எனக் கதை செல்கிறது.

Read Entire Article