ஜெயம் பட புகழ் 'சதா' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

10 months ago 9
ARTICLE AD BOX
கோலிவுட்டில் ஜெயம் படம் மூலம் அறிமுகமான நடிகை சதா,தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி பன்முக நடிகையாக திகழ்கிறார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
Image 1
மகாராஷ்டிராவில் Ratnagiri நகரில் 1984ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிறந்தார் சதா. இவரது தந்தை மருத்துவரும், தாயார் வங்கி ஊழியரும் ஆகும். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், உயர் கல்விக்காக மும்பைக்கு சென்றார்
Image 2
மும்பையில் படித்த சமயத்தில் சதாவுக்கு முதல் திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. 2002ல் ஜெயம் எனும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது 18 வயது மட்டுமே ஆகியிருந்தது. அவரது சிறப்பான நடிப்பால் முதல் படத்திலேயே பிலிம்பேர் விருதும் வென்றார்
Image 3
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஜெயம், அந்நியன், உன்னாலே உன்னாலே ஆகிய படங்கள் சதாவின் சிறந்த படங்கள் ஆகும்.
Image 4
2009ல் Love Khichdi திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார் நடிகை சதா. தொடர்ந்து, Click மற்றும் Dil Toh Deewana Hai ஆகிய படங்களிலும் முக்கியமான ரோலில் நடித்தார்
Image 5
சதாவுக்கு விலங்குகள் மீது தனி பிரியம் உள்ளது. விலங்குளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், சைவ உணவு முறையை சதா பின்பற்றி வருகிறார்
Image 6
சதாவுக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அவர் கதக் நடனத்தில் முறையாக பயிற்சி எடுத்துகொண்டவர். டான்ஸ் மீதான ஆர்வத்தால் தொலைக்காட்சியில் ஏராளமான டான்ஸ் ஷோவுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார்
Image 7
நடிப்பு மட்டுமின்றி வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் திறமைமிக்கவர். புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை வனப்பகுதிக்கு சென்று படம் பிடித்து, sadaa wildlifephotography என்னும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர செய்கிறார்
Image 8
சோசியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருக்கும் சதா, தனது படங்களை அடிக்கடி பகிர செய்வார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர்.
Image 9
Thanks For Reading!
Read Entire Article