ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

3 months ago 5
ARTICLE AD BOX

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் இன்று மோதுகின்​றன. இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பங்​கேற்​றார். 12 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த நிகழ்​வில் 6 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன.

இதில் எந்த இடத்​தி​லும் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் பெயரை குறிப்​பிட​வில்​லை. ஆனால் 140 கோடி ரசிகர்​களுக்​கும் ஞாயிற்​றுக்​கிழமை சிறப்​பான​தாக இருக்​கும் என அவர், தெரி​வித்​தார். இதுதொடர்​பாக சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது: ஆசிய கோப்பை தொடருக்​காக சிறந்த முறை​யில் தயா​ரானோம். மூன்று சிறந்த ஆட்​டங்​களை விளை​யாடி உள்​ளோம். சிறந்த முடிவை பெறு​வதற்கு என்ன செய்ய முடி​யுமோ அதில் கவனம் செலுத்​துகிறோம். கடந்த 3 ஆட்​டங்​களி​லும் நாங்​கள் செய்​துள்ள நல்ல பழக்​கங்​களை தொடர விரும்​பு​கிறோம்.

Read Entire Article