`டபுள் ஹீரோ திரில்லர் சப்ஜெக்ட்’ - டைட்டில் வின்னருடன் இணையும் `பிக்பாஸ்' | Exclusive

7 months ago 8
ARTICLE AD BOX

பிக்பாஸ் சீசன் 6-ன் டைட்டில் வின்னர் அசீமும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸாகக் குரல் கொடுத்து வரும் சாஷோவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இதுகுறித்து நமக்குக் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் இங்கே...

சாஷோ

ஆரம்பத்தில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் அசீம். பிறகு முன்னணி சேனல்களில் பிரைம் டைம் சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவருக்கு நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்கள் காத்திருந்தன. ஆனால் கடைசியில் டைட்டில் வென்றார்.

பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்ததும் படங்கள் பண்ணவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதியாகியுள்ளது.

கலைமகன் முபாரக்

இன்னொருபுறம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலிருந்து பிக்பாஸாக குரல் கொடுத்து வருபவர் சாஷோ. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டான இவர் ஏற்கனவே பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

‘மஞ்சுநாத்’ உள்ளிட்ட சில பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் சாஷோ குறித்து விகடன் தளத்தில் ஏற்கனவே எக்ஸ்க்ளூசிவாகச் செய்தி வெளியிட்டுள்ளோம்.

தற்போது சாஷோவும் அசீமும் இணைந்து நடிக்கும் படத்தை ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிக்கிறாராம்.

இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க சீனு ராமசாமி இயக்கிய இடிமுழக்கம் படத்தை தயாரித்தவர்.

அசீம்

அசீமும் சாஷோவும் இணையும் படம் ’விக்ரம் வேதா’ டைப் கதை என்கிறார்கள். டைட்டில் இன்னும் முடிவாகவில்லையாம். அடுத்த சில தினங்களில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article