ARTICLE AD BOX

கான்பெரா: 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா எங்களுக்கு சவால் கொடுப்பார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது: கடந்த இரண்டு டி 20 உலகக் கோப்பைத் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சவால் மிகுந்த அணியாக நாங்கள் இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பல அணிகளின் இயல்பு இதுதான்.

1 month ago
3







English (US) ·