ARTICLE AD BOX

கராச்சி: வங்கதேச கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெற்ற இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது வங்கதேச அணி.

7 months ago
8







English (US) ·