ARTICLE AD BOX

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். சுனில் கிருஷ்ணான 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
181 ரன்கள் இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்களும் சேர்த்தனர். திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவையாக இருந்தது.

6 months ago
7







English (US) ·