ARTICLE AD BOX

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி'. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்துக்கு வர வழைத்து பாராட்டியுள்ளார்.
"படம் ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தை யும் அழகாக வடிவமைத்து, எல்லோருடனும் கனெக்ட் செய்துவிட்டீர்கள். அனைவரும் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்" என்று அவர் படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

7 months ago
9





English (US) ·