ARTICLE AD BOX

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைய உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் 37 வயதான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் 36 வயதான நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 months ago
8







English (US) ·