டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு

3 months ago 5
ARTICLE AD BOX

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (13-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 198 நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 49 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 19 பேர் கொண்ட குழு இந்த தொடரில் பங்கேற்கிறது. இவர்களில் ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற அவர், நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறார். 2023-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82மீ), செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் (86.67 மீ) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றி இருந்தனர்.

Read Entire Article