‘தக் லைஃப்’ படத்தில் ‘முத்தமழை’ பாடல் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

6 months ago 9
ARTICLE AD BOX

திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் ‘முத்தமழை’ பாடல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. சென்னையில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ என்ற பாடல் இணையத்தில் வைரலானது. பலரும் அவருடைய குரலைக் கேட்டு மெய்மறந்தார்கள். ஆனால், படத்தில் பாடகி தீ குரலில் இப்பாடல் இடம்பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, இன்று ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்தமழை’ பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமன்றி படத்தின் முக்கியமான வில்லனே ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் எனவும் ஒரு தரப்பினர் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும், படத்துக்கும் எதிர்மறை விமர்சனங்களே இணையத்தை ஆட்கொண்டுள்ளன.

Read Entire Article