தடைகளை உடைக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்

4 months ago 6
ARTICLE AD BOX

மும்பை: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஜெமி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: ஐசிசி உலகக் கோப்பை தொடரில் பட்​டம் வெல்ல முடி​யாததற்​கான தடைகளை உடைக்க நாங்​கள் விரும்​பு​கிறோம். அனைத்து இந்​தி​யர்​களும் இதற்​காக காத்​திருக்​கின்​றனர். உலகக் கோப்​பைகள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, என் நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். யுவ​ராஜ் சிங்கை பார்க்​கும் போதெல்​லாம் அது எனக்கு நிறைய உந்​துதலைத் தரு​கிறது.

Read Entire Article