ARTICLE AD BOX

அரியலூர்: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் நடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ந.மணிகண்டன்(33). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு அரியலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மணிகண்டன் ரூ.12 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
மாதந்தோறும் தவணைத் தொகை கட்டி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக தவணைத் தொகையை கட்டவில்லை என்று தெரிகிறது. இதனால், மணிகண்டன் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் இருவர், பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டினார்களாம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மணிகண்டன் கடந்த 25-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

7 months ago
8







English (US) ·