ARTICLE AD BOX

சென்னை: போலீஸாரின் தொடர் நடவடிக்கையாலும், ரவுடிகளுக்கு அதிகளவில் தண்டனை பெற்றுக் கொடுத்ததாலும் தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க தமிழக காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், 2024ம் ஆண்டில் மிகக் குறைந்த அளவாக 1,563 கொலைகள் நடைபெற்றது. இது கடந்த 12 ஆண்டில் நடைபெற்ற கொலைகளில் மிகக் குறைந்ததாகும். இதேபோல், இந்த ஆண்டும் கொலைகள் குறைந்து வருகிறது. அதாவது, கடந்த 4 மாதங்களில் 483 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. காவல் துறையின் தொடர் நடவடிக்கையால் இப்படி கொலைகள் குறைந்துள்ளது.

7 months ago
8







English (US) ·