தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15% குறைவு: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் (கரோனா காலங்களைத் தவிர்த்து) சாலை விபத்து மரணங்கள் குறைவாக பதிவாகியுள்ளன. பலதரப்பட்ட முயற்சிகளால், 2017-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் மரணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

இந்த (2025) ஆண்டின் முதல் காலாண்டில் சாலை விபத்து மரணங்கள் 15 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,864 மரணங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், 2025 இல் 4,136 மரணங்களே ஏற்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில், போக்குவரத்தையும், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக, தடுப்பு நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகிய மாற்றத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இம்முயற்சிகள் உயிரிழப்புகளையும், மரண விபத்துகளையும் 15 சதவீதமாக குறைத்துள்ளன. இது புதிய சாதனையாகும்.

Read Entire Article