தமிழ் நடிகர்களின் வாரிசுகள்.. வந்தார்கள், பார்த்தார்கள், ஆனால்?

3 months ago 4
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் எப்போதுமே வாரிசு நடிகர்கள் (star kids) வந்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை கிளப்புவார்கள். ஆனால் எல்லோரும் தான் வெற்றி பெற்று நீண்ட பயணம் செய்ய முடியவில்லை. சிலர் ஆரம்பத்தில் நல்ல entry-யுடன் வந்தாலும், பிறகு மெதுவாக industry-யில் இருந்து மறைந்துவிட்டார்கள். இங்கே அப்படிப்பட்ட சில நடிகர்கள்:

ஆனந்த் பாபு:

காமெடி கிங் நாகேஷின் மகனான ஆனந்த் பாபு, 80களில் dance skills-ஆல் புகழ்பெற்றார். ஆனால் சில கெட்ட பழக்கங்களாலும், career-க்கு தொடர்ந்து நல்ல scripts கிடைக்காததால் சினிமாவை விட்டே சென்றுவிட்டார்.

Anand-BabuAnand-Babu

பிருத்விராஜன்:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன். இவர் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த ‘கைவந்த கலாய்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனாலும் தற்போது வரை சினிமா துறையில் தனது தந்தை போன்ற தனியொரு அந்தஸ்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார். ஆனால் முயற்சிக்கிறார்.

PrithvirajanPrithvirajan

சக்தி வாசு:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனரான பி வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். இவர் தனது தந்தை இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான ‘தொட்டால் பூ மலரும்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனாலும் இன்று வரை சக்தி சொல்லிக்கொள்ளும் வகையில் சினிமா துறையில் எந்த ஒரு பெரிய வாய்ப்பு இல்லை.

பூபதி:

கோலிவுட்டின் பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் தான் பூபதி. மேலும் மனோரமா பூபதியை நடிகனாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இவ்வளவு ஏன் சொந்த தயாரிப்பில் விசுவின் இயக்கத்தில் ஒரு படத்தைக்கூட  மகனை ஹீரோவாக வைத்து தயாரித்தார். ஆனாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதற்கு மிக முக்கிய காரணம் பூபதியின் மதுப்பழக்கம் தான் என்றும் சொல்லப்படுகிறது.

manorama son boopathimanorama son boopathi

கார்த்திகா நாயர்:

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவரது நடிப்பில் வெளியான முதல் படமே செம ஹிட்டானதால் கார்த்திகாவின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

Karthika Karthika
Read Entire Article