தமிழ்நாடு - நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது

1 month ago 3
ARTICLE AD BOX

பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​தது. தேகா நிஸ்​சல் 161 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்​களில் 446 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தேகா நிஸ்​சல் 175 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 146 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

Read Entire Article