ARTICLE AD BOX

துபாய்: மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 735 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முலான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 63 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். மந்தனா முதன்முதலில் 2019-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் 2-வது முறையாக முதலிடத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 731 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

3 months ago
5







English (US) ·